Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாவீரன் படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளுக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஒப்பந்தம்

மாவீரன் படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளுக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஒப்பந்தம்

By: Nagaraj Sat, 18 Mar 2023 8:09:11 PM

மாவீரன் படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளுக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஒப்பந்தம்

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர் யானிக் பென் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தை மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் படக்குழு அதை முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி விநியோக நிறுவனமாக இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை கையகப்படுத்த இருப்பதாகவும், பக்ரித் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

hollywood,movie,stund master, ,சண்டைக் காட்சி, மாவீரன், ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்களை சன் டிவி கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை படக்குழுவினர் தற்போது பாண்டிச்சேரியில் படமாக்கி வருகின்றனர். முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர் யானிக் பென் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
|