Advertisement

பிரமாண்டமான பண்ணை வீட்டை கட்டுகிறார் தொகுப்பாளர் மணிமேகலை

By: Nagaraj Thu, 25 May 2023 7:04:24 PM

பிரமாண்டமான பண்ணை வீட்டை கட்டுகிறார் தொகுப்பாளர் மணிமேகலை

சென்னை: பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டுகிறார் தொகுப்பாளர் மணிமேகலை. இதுகுறித்த புகைப்படங்கள் வெளிவந்து செம வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மணிமேகலை. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினார்.

photography,farmhouse,log,grandeur,building works ,புகைப்படம், பண்ணை வீடு, பதிவு, பிரமாண்டம், கட்டிட வேலைகள்

ஏன், எதற்கு என இதுவரை காரணம் தெரியவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் குக் வித் கோமாளியில் இருந்து விலகினார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதை மணிமேகலை உறுதிப்படுத்த வில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக பண்ணை வீடு கட்டப்போகிறோம் என பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் மணிமேகலை. இந்நிலையில், பண்ணை வீடு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என கூறி கட்டிட வேலைகள் நடைபெற்று வரும் புகைப்படத்தை தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Tags :
|