- வீடு›
- பொழுதுபோக்கு›
- வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டதற்கு நான் காரணம் இல்லை... பிரதீப் விளக்கம்
வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டதற்கு நான் காரணம் இல்லை... பிரதீப் விளக்கம்
By: Nagaraj Mon, 27 Nov 2023 4:26:56 PM
சென்னை: நான் காரணம் இல்லை என்று விளக்கம்... தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்துவிட்டு திரும்பிய நடிகை வனிதா விஜயகுமார் கொடூரமாக தாக்கப்பட்டார். இதற்கு பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பிரதீப், எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டு, அதை நீக்கியுள்ளார். “நான் எனது போட்டியாளர்களுக்கோ அல்லது யாருக்கும் எதிரானவன் அல்ல. நான் அவர்களிடம் இப்படித்தான் பேசுகிறேன். வனிதா விஜயகுமார், உங்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
ஆனால், உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். ஓய்வு எடுங்கள். ஜோவிகா புத்திசாலி. அவரால் வெல்ல முடியும். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை” என எக்ஸ் தளத்தில் பிரதீப் கூறியுள்ளார்.
அதில் தனது வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டை வனிதா விஜயகுமாரிடம் பகிர்ந்துள்ளார். அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கிறார். பிரதீப் எக்ஸ் தளத்தில் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பதிவிட்டிருந்த நிலையில் அதையும் நீக்கிவிட்டார்.