Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாஸ் என்கிற பாஸ்கரன்-2 வில் நடிக்க நான் தயார்... சந்தானம் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

பாஸ் என்கிற பாஸ்கரன்-2 வில் நடிக்க நான் தயார்... சந்தானம் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

By: Nagaraj Fri, 26 Aug 2022 5:33:54 PM

பாஸ் என்கிற பாஸ்கரன்-2 வில் நடிக்க நான் தயார்... சந்தானம் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

சென்னை: நான் ரெடிங்க... மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்கத் தயார் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கூடவே தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

arya,boss-2,comedy,character,ready to act,santhanam ,ஆர்யா, பாஸ் -2 , நகைச்சுவை, கேரக்டர், நடிக்க தயார், சந்தானம்

இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் கேப்டன் பட விழாவில் பேசிய சந்தானம், ஆர்யா எனக்கு நல்ல நண்பர். என்னிடம் இரண்டு நாயகர்கள் படங்களில் நடிக்கவும், சிறப்பு வேடத்தில் நடிக்கவும் என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் நான் நடிக்கவில்லை.


இப்பொழுது சொல்கிறேன். ஆர்யா, 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' படம் எடுத்தால் அதில் நான் நடிப்பேன். நான் நகைச்சுவை நடிகனாக நடித்துக் கொண்டிருக்கும்போது ஆர்யா என்னை உடற்பயிற்சி செய்ய வற்புறுத்துவார். அவர் பணம் போட்டு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். எல்லோரும் கண்டிப்பாக கேப்டன் படத்தைப் பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|
|
|