Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிப்பதற்கு காட்டு பசியில் இருக்கிறேன்... நடிகர் சிம்பு பதிவிட்ட பழைய வீடியோ

நடிப்பதற்கு காட்டு பசியில் இருக்கிறேன்... நடிகர் சிம்பு பதிவிட்ட பழைய வீடியோ

By: Nagaraj Tue, 07 Mar 2023 11:16:54 PM

நடிப்பதற்கு காட்டு பசியில் இருக்கிறேன்... நடிகர் சிம்பு பதிவிட்ட பழைய வீடியோ

சென்னை: 'நடிப்பதற்கு காட்டு பசியில் இருக்கிறேன், அதற்க்கு தகுந்த கதைகள் கிடைக்கவில்லை. அதனால் நானே படம் இயக்க நினைக்கிறேன்' என முன்பு அளித்த பேட்டி ஒன்றின் வீடியோவை தற்போது சிம்பு பகிர்ந்து இருக்கிறார்.


சிம்பு நடிப்பில் பத்து தல படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது. விரைவில் ஆடியோ லான்ச் விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

simbu,hunger for acting,celebration,fans,next film ,சிம்பு, நடிப்பு பசி, கொண்டாட்டம், ரசிகர்கள், அடுத்தபடம்

சிம்பு தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் என்பதால் அவர் அந்த விழாவுக்கு வருவாரா என கேள்வி எழுந்திருக்கிறது. அவர் பத்து தல டப்பிங் கூட பாங்காக்கில் இருந்து தான் பேசினார் என்று முன்பே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் சிம்பு தனது 48 வது படம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 'நடிப்பதற்கு காட்டு பசியில் இருக்கிறேன், அதற்க்கு தகுந்த கதைகள் கிடைக்கவில்லை. அதனால் நானே படம் இயக்க நினைக்கிறேன்' என முன்பு அளித்த பேட்டி ஒன்றின் வீடியோவை தற்போது சிம்பு பகிர்ந்து இருக்கிறார்.

சிம்பு பதிவிட்ட ட்வீட்டால் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Tags :
|
|