Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நிறைய நடித்து விட்டேன்... இனி ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன்: பாக்யா கோபி தகவல்

நிறைய நடித்து விட்டேன்... இனி ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன்: பாக்யா கோபி தகவல்

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:58:25 PM

நிறைய நடித்து விட்டேன்... இனி ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன்: பாக்யா கோபி தகவல்

சென்னை; '3 வருடங்களாக, 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன், எனக்கு இதுவே போதும். இனி ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறேன்' என பாக்கியலட்சுமி கோபி கூறி இருக்கிறார்.

விஜய் டிவியின் டாப் சீரியல் தற்போது பாக்கியலட்சுமி தான். இந்த தொடரில் தற்போது பாக்யா பல தடைகளை தாண்டி எப்படி கேட்டரிங் பிஸ்னஸில் ஜெயிக்க தொடங்கி இருக்கிறார் என காட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாக்யாவை ஏளனப்படுத்தி விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்த கோபி படாத பாடுபட்டு வரும் கோபிக்கு இனி காட்சிகள் இல்லையா? கேட்டு வருகின்றனர்.

ஆங்கிலம் பேச தெரியாது என பாக்யாவை ராதிகா அசிங்கப்படுத்தியதால் அவருக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்து பாக்யா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாசுக்கு செல்கிறார். அங்கு செல்லும் வழியில் அவர் மீது ரஞ்சித் பைக்கில் மோதிவிடுகிறார்.

rest,3 years,800 episodes,done,obi ,ரெஸ்ட், 3 வருடம், 800 எபிோடுகள், நடித்து விட்டேன், ோபி

அவர்கள் இருவரும் ஒரே ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாசு தான் சென்றிருக்கின்றனர். அதனால் இனி அவர்கள் இருவரது ட்ராக் தான் பாக்யலட்சுமியில் வர இருக்கிறது. இனி ரஞ்சித் ரோலுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும், கோபி கதாபாத்திரத்திற்கு காட்சிகள் குறைக்கப்படும் என தெரிகிறது. இதை கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் உறுதி செய்து இருக்கிறார்.

'3 வருடங்களாக, 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன், எனக்கு இதுவே போதும். இனி ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறேன்' என கோபி கூறி இருக்கிறார்.

Tags :
|
|