- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் அனுப்பினால் எனக்கு 2 ரெட்கார்டு வேண்டும்... பிரதீப் பதிவு
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் அனுப்பினால் எனக்கு 2 ரெட்கார்டு வேண்டும்... பிரதீப் பதிவு
By: Nagaraj Fri, 10 Nov 2023 4:57:19 PM
சென்னை: ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் தனது இன்ஸ்டாவில் தற்போது Endemol ShineIND என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 Red Card வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் தொடங்கியது தமிழ் சின்னத்திரையின் பெரிய பட்ஜெட் ஷோ பிக்பாஸ் 7. மக்களுக்கு நன்கு பரீட்சயமான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இன்னும் யாரும் தங்களின் தனித்துவத்தை அவ்வளவாக நிரூபிக்கவில்லை.
நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது என்ற அளவிற்கு தான் உள்ளது, அதாவது இன்னும் அவ்வளவாக விறுவிறுப்பு இல்லை என்பது ரசிகர்களின் எண்ணம். வைல்ட் கார்ட்டு என்ட்ரியில் மக்களுக்கு அறிமுகமானவர்கள் வந்துள்ளனர். அவர்களால் கொஞ்சம் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது.
கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து Red Card கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேறியதில் இருந்து நிறைய பேர் நிகழ்ச்சி குறித்து பேசுகிறார்கள். இந்த நிலையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் தனது இன்ஸ்டாவில் தற்போது Endemol ShineIND என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 Red Card வேண்டும்.
எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற வேண்டும், அதோடு நான் 7வது வாரத்தின் கேப்டன் ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகிறது, செம நெத்தியடி என்றும் ரசிகர்கள் கமெண்ட செய்கிறார்கள்.