Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ..விஷால்

விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ..விஷால்

By: vaithegi Wed, 30 Aug 2023 11:01:17 AM

விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்  ..விஷால்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், “ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் அவர்களை பராமரித்து வரும் கன்னியாஸ்திரிகளிடம் வாழ்த்து பெறுவது, கடவுள் நேரில் வந்து வாழ்த்துவது போன்ற ஒரு உணர்வை தருகிறது.மேலும் என் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது இப்படியான விஷயங்கள் என் பிறந்த நாளில் செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

அதையடுத்து விஜய் அரசியல் குறித்து பேசுகையில், “விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் அறிவிக்கட்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வரவேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தால் நல்லது” என்றார்.

vishal,vijay ,விஷால்,விஜய்


விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடிக்கப்படும் என்று தெரிவித்த விஷால், மிஷ்கின் குறித்து பேசுகையில், “துப்பறிவாளன் பார்ட் 2 நான் தான் இயகுக்கிறேன். மிஷ்கின் கதபற்றி திரைக்கதையை மாற்றியிருக்கிறேன். இயக்குநராக நான் ரசிக்கும் ஒருவர் மிஷ்கின். ஒரு அண்ணன் ஸ்தானத்தில் அவர் இருப்பார்.

ஆனால் தயாரிப்பாளராக அப்படி பார்க்கமுடியாது. அதைப் பற்றி நான் கூறவும் விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து அவரிடம் தேசிய விருது தேர்வு பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு, “4 பேர் அமர்ந்து கொண்டு, விருதாளர்களை தேர்வு செய்வதிலெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது” என அவர் கூறினார்.

Tags :
|