- வீடு›
- பொழுதுபோக்கு›
- கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன்... நடிகர் விஜய் ஆண்டனி பதிவு
கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன்... நடிகர் விஜய் ஆண்டனி பதிவு
By: Nagaraj Wed, 25 Jan 2023 10:12:45 PM
சென்னை: மலேசியாவில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துவிட்டேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன் என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’. 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது மற்றும் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நடிப்பு தவிர விஜய் ஆண்டனியே இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி மலேசியாவில் விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது விஜய் ஆண்டனி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மலேசியாவில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துவிட்டேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன். உங்கள் ஆதரவுக்கும் எனது உடல்நிலையில் அக்கறை காட்டியதற்கும் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.