Advertisement

வயது என்னை மாற்ற அனுமதிக்க மாட்டேன்... நடிகை ஜோதிகா திட்டவட்டம்

By: Nagaraj Fri, 21 Oct 2022 6:59:32 PM

வயது என்னை மாற்ற அனுமதிக்க மாட்டேன்... நடிகை ஜோதிகா திட்டவட்டம்

சென்னை: வயது என்னை மாற்ற அனுமதிக்க மாட்டேன். உடற்பயிற்சி முறைகள் மூலம் வயதை மாற்றிக் கொள்வேன் என்று நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு நடிகை ஜோதிகா தனது உடல்நிலை மற்றும் தோற்றத்தில் அதிக அக்கறை எடுத்து வருகிறார். தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஜோதிகா, தனது உடற்பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஜோதிகாவின் பிறந்தநாளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார்.

actress,jyothika,mammootty,mother of two ,இரண்டு, குழந்தைகளுக்கு, ஜோதிகா, திருமணம்

அதில், ‘இந்த பிறந்தநாளை எனக்கு வலிமை மற்றும் ஆரோக்கியத்துடன் பரிசாக அளிக்கிறேன். வயது என்னை மாற்ற அனுமதிக்க மாட்டேன். உடற்பயிற்சி முறைகள் மூலம் வயதை மாற்றிக் கொள்வேன்’ என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ஜோதிகா, பெண்களிடம் உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இணையதளத்தில் அவரை பாராட்டி வருகின்றனர்

Tags :