Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கல்வியில் சமரசம் செய்துகொண்டால் எதிர்காலம் இருக்காது; பாடக்குறைப்பிற்கு நடிகை டாப்சி கண்டனம்

கல்வியில் சமரசம் செய்துகொண்டால் எதிர்காலம் இருக்காது; பாடக்குறைப்பிற்கு நடிகை டாப்சி கண்டனம்

By: Monisha Fri, 10 July 2020 11:51:55 AM

கல்வியில் சமரசம் செய்துகொண்டால் எதிர்காலம் இருக்காது; பாடக்குறைப்பிற்கு நடிகை டாப்சி கண்டனம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படாததால் வரும் கல்வியாண்டு நாட்கள் குறையும். இதனால் மாணவா்களின் கல்விச் சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்த பாடத்திட்ட குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பாடக்குறைப்பு என்பது இந்த கல்வியாண்டுக்கு மட்டுமே என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.

மேலும் இந்த பாடக்குறைப்பில் ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை, உணவு பாதுகாப்பு, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, ஜாதி, மதம், பாலினம் ஆகிய பாடங்கள் இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனும் இதுகுறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

education,syllabus,acting tapsee,cbse,future ,கல்வி,பாடக்குறைப்பு,நடிகை டாப்சி,சிபிஎஸ்இ,எதிர்காலம்

இந்த நிலையில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் அஜித்தின் 'ஆரம்பம்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை டாப்சி இதுகுறித்து கூறியதாவது:-

'ஏதேனும் அதிகாரபூர்வ அறிவிப்பை நான் தவறவிட்டு விட்டேனா? அல்லது இவை எல்லாம் எதிர்காலத்துக்குத் தேவைப்படாதா? கல்வியில் சமரசம் செய்துகொண்டால் எதிர்காலம் என்பது இருக்காது' என்று தெரிவித்துள்ளார். டாப்சியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|