Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஹாலிவுட் படத்தில் நடித்தால் பெரிய ஆளா... சிம்புவின் பேச்சு கிளப்பிய சர்ச்சை

ஹாலிவுட் படத்தில் நடித்தால் பெரிய ஆளா... சிம்புவின் பேச்சு கிளப்பிய சர்ச்சை

By: Nagaraj Sat, 17 Sept 2022 10:16:22 PM

ஹாலிவுட் படத்தில் நடித்தால் பெரிய ஆளா... சிம்புவின்  பேச்சு கிளப்பிய சர்ச்சை

சென்னை: சிம்பு பேச்சால் வந்த வம்பு... சிலர் நிறைய மொழி திரைப்படங்களில் நடித்து விட்டால் பெரிய ஆளாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துவிட்டால் மட்டும் பெரிய ஆளாகி விட முடியாது என்று சிம்பு பேசியது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் இப்போது நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் ஏறுமுகத்தில் இருக்கிறது.

dhanush fans,simbu,tough question,opinion,cold war,review ,தனுஷ் ரசிகர்கள், சிம்பு, கடுமையான கேள்வி, கருத்து, பனிப்போர், விமர்சனம்

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சிம்பு தற்போது பல சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார். அதில் ஒரு பேட்டியில் அவர் கூறிய விஷயம் தற்போது சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பேட்டியில் அவர் நேரடியாக தனுஷை தாக்கும் விதத்தில் ஒரு சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: சிலர் நிறைய மொழி திரைப்படங்களில் நடித்து விட்டால் பெரிய ஆளாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துவிட்டால் மட்டும் பெரிய ஆளாகி விட முடியாது. என்னதான் நாம் பல மொழிகளில் நடித்தாலும் நம்முடைய வேலையில் சரியாக இருந்தால்தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

Tags :
|