Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இனி இப்படி கேட்டால் நான் நடிப்பதில் இருந்தே விலகுவேன்... அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

இனி இப்படி கேட்டால் நான் நடிப்பதில் இருந்தே விலகுவேன்... அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

By: Nagaraj Mon, 20 Mar 2023 8:37:05 PM

இனி இப்படி கேட்டால் நான் நடிப்பதில் இருந்தே விலகுவேன்... அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

ஐதராபாத்: அடுத்தது என்ன படம் என்று கேட்ட ரசிகர்களுக்கு எந்த படத்திலும் நான் இனி நடிக்கமாட்டேன். நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை கேட்டால், படத்தில் நடிப்பதில் இருந்து விலக போகிறேன் என்று ஷாக் கொடுக்கும் பதிலை கொடுத்துள்ளார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த 13ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற பாடல் நாட்டு நாட்டுக்காக கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் நடிகர் ராம்சரண் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.

பரிசளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு ஆர்.ஆர்.ஆர். படக்குழு சமீபத்தில் நாடு திரும்பியது. இயக்குனர் ராஜமௌலி, அவரது மனைவி ரமா, இசை அமைப்பாளர் கீரவாணி மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஹைதராபாத் திரும்பினர். அதேபோல் ஜூனியர் என்டிஆர் நாடு திரும்பினார். சமீபத்தில் நடிகர் விஷ்வக் சென்னின் தாஸ் கா தம்கி படத்தின் முன் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரசிகர்களுடனும் உரையாடினார்.

answer,fans,jr ntr,next movie,question,rrr ,அடுத்த படம், ஆர்.ஆர்.ஆர, கேள்வி, ஜூனியர் என்.டி.ஆர், பதில், ரசிகர்கள்

அவரது ரசிகர்கள் சிலர், அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் ரசிகர்களை நோக்கி, எந்த படத்திலும் நான் இனி நடிக்கமாட்டேன். நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை கேட்டால், படத்தில் நடிப்பதில் இருந்து விலக போகிறேன். நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதனால், ரசிகர்கள் சற்று அமைதியில் ஆழ்ந்தனர். அப்போது அவரே ரசிகர்களை நோக்கி, படங்களில் நடிப்பதில் இருந்து விலகும் எந்த திட்டமும் இல்லை. விரைவில் அடுத்த படத்தில் நடிப்பேன் என உறுதி கூறினார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அடுத்து, நடிகை ஜான்வி கபூருடன் சேர்ந்து கொரட்டலா சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி வெளிவர திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags :
|
|
|