Advertisement

பிக்பாஸ் 6ல் பங்கேற்பார்ன்னு பார்த்தா... ஹாஸ்பிடலில் இருக்காராமே!!!

By: Nagaraj Sun, 02 Oct 2022 5:28:25 PM

பிக்பாஸ் 6ல் பங்கேற்பார்ன்னு பார்த்தா... ஹாஸ்பிடலில் இருக்காராமே!!!

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் ஹாஸ்பிடல் பெட்டில் இருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு இருப்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இவர் பிக்பாஸ்-6 ல் பங்கேற்க உள்ளார் என்ற செய்தி உலா வரும் நிலையில் இப்படி ஹாஸ்பிடலில் இருக்கிறாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக வருவார்கள் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

jacqueline,shock,hospital,photography,fans ,ஜாக்குலின், அதிர்ச்சி, ஹாஸ்பிடல், புகைப்படம், ரசிகர்கள்

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் சீரியல் நடிகையாக மாறிய ஜாக்குலினும் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கும் பிக் பாஸ் 6 ஷோவுக்கு போட்டியாளராக வருகிறார் என கூறப்படுகிறது. இருப்பினும் அது பற்றி உறுதியான தகவல் எதுவும் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் தற்போது ஜாக்குலின் ஹாஸ்பிடல் பெட்டில் இருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். 'எல்லாம் விரைவில் சரியாகிவிடும்' எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் 'ஜாக்குலினுக்கு என்னாச்சு' என அதிர்ச்சி உடன் கேட்டு வருகிறார்கள்.

Tags :
|