Advertisement

பிக்பாஸாக இருப்பேன்... நடிகர் மன்சூர் அலிகானின் அசால்ட் பதில்

By: Nagaraj Sat, 29 Oct 2022 7:10:47 PM

பிக்பாஸாக இருப்பேன்... நடிகர் மன்சூர் அலிகானின் அசால்ட் பதில்

சென்னை: பிக் பாசில் கூத்தடிப்பது பிடிக்கல. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன். அப்படி செல்வதாக இருந்தால் அங்கு நான் தான் பிக்பாஸாக இருப்பேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாம் சீசன் தற்போது மூன்றாம் வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல் தற்போதைய சீசன் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

bigg boss,mansoor ali khan,chellamaaten,vijay tv,try ,பிக்பாஸ், மன்சூர் அலிகான், செல்லமாட்டேன், விஜய் டிவி, முயற்சி

மேலும் இரண்டாம் வாரத்தில் முக்கிய போட்டியாளராக இருந்த ஜி.பி. முத்து தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்லி வெளியில் சென்றுவிட்டார். மேலும் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டு விட்டார். ஜி.பி. முத்துவுக்கு பதில் தற்போது மன்சூர் அலி கானை கொண்டு வர விஜய் டிவி முயற்சித்து வருகிறது என தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் மன்சூர் இதுபற்றி பதில் அளித்து இருக்கிறார். "பிக் பாசில் கூத்தடிப்பது பிடிக்கல. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன். அப்படி செல்வதாக இருந்தால் அங்கு நான் தான் பிக்பாஸாக இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

Tags :