Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கர்ப்பமாக இருக்கிறேன்... மகிழ்ச்சியுடன் தெரிவித்த மைனா நந்தினி; குவியும் வாழ்த்துக்கள்

கர்ப்பமாக இருக்கிறேன்... மகிழ்ச்சியுடன் தெரிவித்த மைனா நந்தினி; குவியும் வாழ்த்துக்கள்

By: Nagaraj Sat, 23 May 2020 1:40:15 PM

கர்ப்பமாக இருக்கிறேன்... மகிழ்ச்சியுடன் தெரிவித்த மைனா நந்தினி; குவியும் வாழ்த்துக்கள்

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் நடிகை மைனா நந்தினி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் குடும்பப்பாங்கான கிராமத்து பெண்ணாக, மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தினி. இதில் இவரது நடிப்பு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. தொடர்ந்து இவர் வம்சம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

fans greet,maina nandini,pregnancy,couples,birthday ,ரசிகர்கள் வாழ்த்து, மைனா நந்தினி, கர்ப்பம், தம்பதி, பிறந்தநாள்

சினிமாவை விட இவருக்கு டிவி தொடர்கள் நல்ல பெயரையும், புகழையும் பெற்று தந்தன. சீரியல், டான்ஸ் ஷோ என பிஸியாக இருந்த மைனா நந்தினி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார் .

இந்நிலையில் நேற்று மைனா நந்தினி தனது பிறந்தநாளை கணவர் மற்றும் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் சற்றே உடல் குண்டான தோற்றத்தில் மைனா நந்தினி இருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து யோகேஸ் மற்றும் மைனா நந்தினி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Tags :