- வீடு›
- பொழுதுபோக்கு›
- இன்று காலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இன்று காலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
By: Nagaraj Fri, 27 Nov 2020 09:29:19 AM
திடீரென்று வந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் உருவாக இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அந்த படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் விலகினார். விஜய்க்கு அவர் கூறிய கதையில் திருப்தி ஏற்படவில்லை.
விஜய் கதையில் இன்னும் ஷார்ப் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதற்கு இயக்குனர் முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த படம் டிராப் ஆகி உள்ளதாக தகவல்கள் உலா வந்தது. இதையடுத்து விஜய் படத்தை நெல்சன் இயக்குவார் என்று கூறப்பட்டது.
ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய
நெல்சன், தளபதி 65படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதாகவும் கோலிவுட்
வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை 9.09
மணிக்கு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி
உள்ளது.
இந்த அறிவிப்பு தளபதி 65 படம் பற்றியதுதான் என்று
ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. நாளை காலை தெரிந்து விடும் என்பதால்
ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.