Advertisement

வாத்தி படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல்

By: vaithegi Mon, 27 Feb 2023 6:42:51 PM

வாத்தி படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல்

திருச்சிற்றம்பலம், நானே வருவேன், தற்போது வாத்தி பண்ற 3 படங்களும் தனுஷிற்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். இதையடுத்து இதில் ‘வாத்தி ” திரைப்படம் கடந்த 17-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சாமியுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழில் “வாத்தி” என்ற பெயரிலும், தெலுங்கில் “சார்” என்ற பெயரிலும் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 700 திரையரங்குகளில் வெளியானது.

collection,vaathi ,வசூல் ,வாத்தி

இதனை அடுத்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது. படம் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் படம் 50 கோடியும், தெலுங்கில் 30 கோடி என்று மொத்தமாக 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :