Advertisement

அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகளாம்

By: Nagaraj Sat, 21 Jan 2023 10:52:42 PM

அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகளாம்

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பதானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி வெளியான படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு, அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் படம் எகே62 இல் நடிக்கவுள்ளார்.

aishwarya rai,ak62,vignesh sivan, ,ஏகே62, ஐஸ்வர்யா ராய், விக்னேஷ் சிவன்

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வரும் நிலையில், தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பதானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், அஜித்துடன் ஜோடி சேரப்போவது யார் என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால்தான் தெரியும்.

Tags :
|