Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இதுபோன்ற பிரமாண்ட மேடையை எத்தனை படங்களில் பார்க்க முடியும்... பார்த்திபன்

இதுபோன்ற பிரமாண்ட மேடையை எத்தனை படங்களில் பார்க்க முடியும்... பார்த்திபன்

By: Nagaraj Thu, 29 Sept 2022 10:49:41 PM

இதுபோன்ற பிரமாண்ட மேடையை எத்தனை படங்களில் பார்க்க முடியும்... பார்த்திபன்

சென்னை: இதுபோன்ற பிரம்மாண்ட மேடையை இன்னும் எத்தனை படங்களில் பார்க்க முடியும் என்று தெரியவில்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழுவினர் தற்போது பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நாளை படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு இன்று நிருபர்களை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, என்னை நிருபர் சந்திப்புக்கு அழைத்த போது நான் முதலில் வரவில்லை என்று தான் கூறினேன்.

Tags :