Advertisement

ஜிகர்தண்டா 2ல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா... அப்போ கதாநாயகன் ராகவாதான்

By: Nagaraj Tue, 13 Dec 2022 10:23:51 PM

ஜிகர்தண்டா 2ல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா... அப்போ கதாநாயகன் ராகவாதான்

சென்னை: ஜிகர்தண்டா 2’ படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா. கருணாகரன் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா வென்றார். இந்தப் படத்தின் வெற்றியால் ஜிகர் தண்டா தெலுங்கில் ‘கட்டலகொண்ட கணேஷ்’ என்றும், இந்தியில் ‘பச்சன் பாண்டே’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்திலும் ‘ரீமேக்’ செய்தனர்.

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அறிவித்திருந்தார். நடிகர், நடிகைகள் யார் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் சிறிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு குடிசையில் வினோதமாக தோற்றமளிக்கும் லாரன்ஸுடன் மோதும் எஸ்.ஜே. சூர்யா துப்பாக்கியுடன் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதிலிருந்து லாரன்ஸ் கதாநாயகனாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

jigarthanda 2, Lawrence, SJ Surya, எஸ்.ஜே.சூர்யா, ஜிகர்தண்டா 2, லாரன்ஸ்

Tags :