Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் சோழ கால பெருமையை புகழ்ந்து பேசினார்கள்..

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் சோழ கால பெருமையை புகழ்ந்து பேசினார்கள்..

By: Monisha Sun, 10 July 2022 8:43:39 PM

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் சோழ கால பெருமையை புகழ்ந்து பேசினார்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாவுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், பொன்னியின் செல்வன் படம் சோழ வரலாற்றை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்யும் எனவும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம் தமிழ் வரலாற்றைச் சொல்லிக்கொடுத்து வளர்போம் என்றும் கூறியுள்ளார்.

ponniyin selvan,teaser,glory,chola ,பொன்னியின் செல்வன் ,டீசர்,சோழர்,வரலாறு,

இது பற்றி விரிவாகப் பேசிய ஜெயமோகன் இவ்வாறு கூறியிருந்தார்."இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனிடம் கேட்டாலும் சோழர் என்ற பெயர்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அது செப்டம்பர் 30-ம் தேதி வரையிலும்தான்.

இப்படம் வெளியானால் சோழர் மட்டுமல்ல அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் ஆகிய அத்தனைப் பெயர்களும் இந்தியா முழுக்கச் சென்று சேர்ந்திருக்கும். அதுதான் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி. இனி உங்கள் குழந்தைகளிடம் சோழ வரலாற்றை எளிதில் கொண்டு சேர்க்க முடியும்.

அவர்களின் நிலம், போர், அரண்மனை, கோட்டை மதில், கதாபாத்திரங்கள் என அனைத்தையும் அவர்களின் கண்முன் காட்ட முடியும். நம்முடைய குழந்தைகள் அமெரிக்கா, ஐரோப்பிய வரலாற்றைத் தெரிந்துகொண்டு வளர்கிறார்கள். இனி அவர்களுக்கு நம் தமிழ் வரலாற்றைச் சொல்லித் தருவோம்" என்று பேசியுள்ளார்.

Tags :
|
|