Advertisement

சூரத்தில் நடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவு

By: Nagaraj Sun, 11 June 2023 10:51:37 PM

சூரத்தில் நடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவு

சென்னை: சூரத்தில் நடைபெற்று வந்த ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

few days,finale,indian-2,shooting, ,இந்தியன்-2, இறுதிக்கட்டம், சில நாட்கள், படப்பிடிப்பு

லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இதையடுத்து இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பார் என்றும், அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா தனது காட்சிகளை முடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூரத்தில் நடைபெற்று வந்த ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|