Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மீண்டும் வேகமெடுக்க உள்ள இந்தியன்-2; புதிதாக சேர்கிறார் நடிகர் கார்த்திக்

மீண்டும் வேகமெடுக்க உள்ள இந்தியன்-2; புதிதாக சேர்கிறார் நடிகர் கார்த்திக்

By: Nagaraj Sun, 07 Aug 2022 10:29:05 AM

மீண்டும் வேகமெடுக்க உள்ள இந்தியன்-2; புதிதாக சேர்கிறார் நடிகர் கார்த்திக்

சென்னை: இயக்குனர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் முன்னணி நடிகரான கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கமலின் இந்தியன் 2 படம் மீண்டும் பிக்அப் ஆவதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல பிரச்சனைகளுக்கு பிறகு 'இந்தியன் 2' திரைப்படம் மீண்டும் தொடங்கவுள்ளது. படத்தை தயாரிக்கும் லைக்காவுடனான பிரச்சனை முடிவுக்கு வந்ததால் 'இந்தியன் 2' படத்தை வரும் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி ஷங்கர் தொடங்கவுள்ளார். இதுவரை 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

kamal,indian-2,america,director shankar,joins,karthik ,கமல், இந்தியன்-2, அமெரிக்கா, இயக்குனர் ஷங்கர், இணைகிறார், கார்த்திக்

தற்போது தெலுங்கில் ராம் சரண் படத்தை இயக்கி வரும் ஷங்கர், எப்படி இந்தியன் 2 படத்தையும் இயக்குவார் என கேள்வி எழுந்தது. இரு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி முடிக்க ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஆகஸ்ட் 3வது வாரம் ராம் சரண் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் நடக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் தொடங்குவார் என தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் இணையவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|