- வீடு›
- பொழுதுபோக்கு›
- மூன்று மணிநேரத்திற்கு மேலும் ஓடுமாம் இந்தியன் -2
மூன்று மணிநேரத்திற்கு மேலும் ஓடுமாம் இந்தியன் -2
By: Nagaraj Sun, 11 Sept 2022 1:10:17 PM
சென்னை: இந்தியன் 2 படத்தை 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடக்கூடியதாக உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக இந்த படத்துக்கு வசனம் எழுதும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
அதிக நேரம் ஓடும் படமாக இந்தியன் 2 உருவாக உள்ளது. சமீப காலமாக பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் 2 மணி 45 நிமிடத்துக்கும் அதற்கு மேலும் ஓடுவதாக உருவாக்கப்படுகிறது. அந்த வரிசையில் இந்தியன் 2 படமும் அமைய உள்ளது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த மாதம் முதல் ஷெட்யூல் நடந்தது. அடுத்த ஷெட்யூல், செப்டம்பர் 19ம்
தேதிக்கு மேல் தொடங்க உள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். இதற்காக
சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று ஹாலிவுட் மேக்அப் கலைஞர்களை சந்தித்து
வந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடக்கூடியதாக
உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக இந்த படத்துக்கு வசனம் எழுதும் ஜெயமோகன்
தெரிவித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வந்த படங்களில் அதிக நேரம் ஓடும் தமிழ் படமாக இந்தியன் 2 அமையும் என தெரிகிறது.