- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் சூர்யாவின் 40வது படம் குறித்த தகவல்!
நடிகர் சூர்யாவின் 40வது படம் குறித்த தகவல்!
By: Monisha Mon, 26 Oct 2020 09:39:40 AM
நடிகர் சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியது.
சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் எது என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக எழுந்து வந்தது. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடி வாசல்' திரைப்படம் மற்றும் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ’அருவா’ ஆகிய திரைப்படங்களில் ஒன்றுதான் சூர்யாவின் அடுத்த படம் என செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி சூர்யாவின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யாவின் அடுத்த படம் இந்த படம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இந்தப் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.