Advertisement

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல்!

By: Monisha Wed, 25 Nov 2020 4:49:50 PM

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய் போன்றவர்கள் நடித்த படங்களை இயக்கி பிரபலமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அஜித்குமார் நடித்த 'தீனா' படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

tamil cinema,director,ar murugadoss,animation ,தமிழ் சினிமா,இயக்குனர்,ஏ.ஆர்.முருகதாஸ்,அனிமேஷன்

இவர் அடுத்ததாக விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் 'தி லயன் கிங்' போன்று முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :