- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிளான் பண்ணி பண்ணனும் என்ற நகைச்சுவை படம் குறித்து வெளியான ஆச்சரிய தகவல்!
பிளான் பண்ணி பண்ணனும் என்ற நகைச்சுவை படம் குறித்து வெளியான ஆச்சரிய தகவல்!
By: Monisha Fri, 19 June 2020 12:52:38 PM
‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற பெயரில் இரண்டரை மணி நேரமும் சிரிக்கும் வகையில், ஒரு நகைச்சுவை படம் தயாராகி இருக்கிறது. இந்த நகைச்சுவை படத்தை குறித்து டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:-
இது ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன். பாசமுள்ள அம்மா-அப்பா, உயிர் நண்பன் என அவனுக்கு சந்தோசமான வாழ்க்கை. வட சென்னை என்றாலே ரவுடிகள், கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி, ‘ஐ.டி.’ துறையில் வேலை செய்கிறான்.
கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறாள். அவளுடைய லட்சியம் நிறை வேறியதா? என்பதே கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கேரள மாநிலம் வாகமன், சிக்கிம் ஆகிய இடங்களில் நடந்தது.
சிக்கிமில் மைனஸ் 7 டிகிரி குளிர் வாட்டி வதைத்தது. கதாநாயகனும், கதாநாயகியும் நடிப்பதற்கே சிரமப்பட்டார்கள். படப்பிடிப்பு நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. அங்கிருந்து சீன எல்லை 5 கிலோ மீட்டர்தான். பனி படர்ந்த உயரமான மலைப் பகுதியும், கிடுகிடு பள்ளத்தாக்குகளும் பிரமிக்க வைத்தன.
திரைக்கு வர தயாராக உள்ள இந்த படத்தில் ரியோராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜேஷ்குமார், எல்.சிந்தன் ஆகிய இருவரும் படத்தை தயாரித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.