Advertisement

உலகம் முழுவதும் ஜவான் படம் செய்த வசூல் குறித்த தகவல்

By: Nagaraj Thu, 14 Sept 2023 9:58:22 PM

உலகம் முழுவதும் ஜவான் படம் செய்த வசூல் குறித்த தகவல்

சென்னை: உலகம் முழுவதும் ‘ஜவான்’ படம் வசூல் செய்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜவான் படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ.621 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

collection,jawaan,rs.600 crore,shah rukh khan,world , உலகம், ஜவான், ரூ.600 கோடி, வசூல், ஷாருகான்

தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

‘ஜவான்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ‘ஜவான்’ படம் வசூல் செய்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜவான் படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ.621 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
|