Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

By: Monisha Wed, 16 Sept 2020 11:22:47 AM

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் 'மாநகரம்' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் ’கைதி’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

இதனை அடுத்து தற்போது அவர் இயக்கி முடித்துள்ள தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் ரிலீஸானால் லோகேஷ் கனகராஜ் உச்சகட்ட புகழ் அடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

tamil cinema,lokesh kanagaraj,rajinikanth,kamal haasan ,தமிழ் சினிமா,லோகேஷ் கனகராஜ்,ரஜினிகாந்த்,கமல்ஹாசன்

கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும், கமல்ஹாசன் தயாரிப்பில் அவரே நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும், தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை மாலை 6 மணி மணிக்கு வெளியிடுவதாக அறிவித்து உள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா? அல்லது கமல்ஹாசன் நடித்து தயாரிப்பாரா? என்பதை நாளை மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :