- வீடு›
- பொழுதுபோக்கு›
- வாரிசு, துணிவு படத்தில் நடிக்க விஜய், அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்
வாரிசு, துணிவு படத்தில் நடிக்க விஜய், அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்
By: Nagaraj Mon, 26 Dec 2022 4:35:16 PM
சென்னை: வாரிசு படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதே போல், துணிவு படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 70 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு திரைப்படங்களும் வெளியாகிறது.
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகிறது.
இதனாலேயே இரு திரைப்படங்கள் மீதும் அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள்
வைத்துள்ளனர்.
இந்நிலையில், வாரிசு படத்திற்காக
விஜய்யும், துணிவு படத்திற்காக அஜித்தும் வாங்கியுள்ள சம்பளம் குறித்து
தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 120
கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதே போல், துணிவு படத்திற்காக நடிகர் அஜித்
ரூ. 70 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதை கேட்டு ரசிகர்கள் வாய் பிளந்து போய் உள்ளனர்.