- வீடு›
- பொழுதுபோக்கு›
- துணிவு படத்தின் சில்லா... சில்லா பாடல் குறித்த தகவல்
துணிவு படத்தின் சில்லா... சில்லா பாடல் குறித்த தகவல்
By: Nagaraj Wed, 23 Nov 2022 6:32:28 PM
சென்னை: துணிவு திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் வினோத்- நடிகர் அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. தற்போது படத்தின்
டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக
தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி
பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம்
பெற்று இருக்கின்றது.
இந்த நிலையில் இப்படத்தில்
இடம்பெற்றுள்ள அஜித்தின் அறிமுக படலான சில்லா..சில்லா பாடலின் படப்பிடிப்பு
நேற்று ஆரம்பமாகி இருப்பதாகவும் இதில் அஜித் பங்கேற்று நடனமாடி
இருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கின்றது. இப்பாடலை இசையமைப்பாளர்
அனிருத் பாடி இருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.