- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய் நடித்துள்ள படத்தின் கதை குறித்து இணையத்தில் உலா வரும் தகவல்
விஜய் நடித்துள்ள படத்தின் கதை குறித்து இணையத்தில் உலா வரும் தகவல்
By: Nagaraj Sat, 24 Dec 2022 9:27:00 PM
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் கதை இதுதான் என்று ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதனையடுத்து,
இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி,
இந்த படத்தில் சரத்குமாரின் வளர்ப்பு மகன் விஜய். திடீரென சரத்குமார்
இறந்து விடுகிறார். இதைத்தொடர்ந்து இவரின் வியாபாரத்தை விஜய் எடுத்து
நடத்துகிறார். அப்போது வரும் திருப்பங்களும், எதிர்ப்புகளும் தான் இந்த
படத்தின் கதை என தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.