Advertisement

இயக்குனர் மிஷ்கின் அடுத்த படம் குறித்த தகவல்!

By: Monisha Wed, 03 June 2020 5:36:20 PM

இயக்குனர் மிஷ்கின் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகில் ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மிஷ்கின். அவர் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

director mysskin,arunvijay,next film,simbu ,இயக்குனர் மிஷ்கின்,அருண்விஜய்,அடுத்த படம்,சிம்பு

இதையடுத்து மிஷ்கின் இரண்டு படங்களை இயக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். அதன்படி அருண்விஜய் மற்றும் சிம்பு படங்களை அவர் இயக்க உள்ளார். மிஷ்கின், அருண்விஜய்யை வைத்து பேய் படம் ஒன்று இயக்க உள்ளாராம். இந்தப்படத்தில் அருண்விஜய் போலீசாக நடிக்கிறாராம். மேலும் இப்படத்திற்கு 'காவு' என தலைப்பு வைக்க உள்ளதாகவும் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்ததாக சிம்பு நடிக்கும் படத்தை அடுத்தாண்டு எடுக்க திட்டமிட்டுள்ளதாக மிஷ்கின் கூறியுள்ளார்.

Tags :