Advertisement

விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மாஸ்டர் படம் பற்றிய தகவல்

By: Nagaraj Fri, 29 May 2020 11:16:22 AM

விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மாஸ்டர் படம் பற்றிய தகவல்

கடந்த ஏப்.9ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டிய படம் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி உள்ளது.

இதனால் இந்த படம் தீபாவளி அன்று வெளியாகலாம் அல்லது அதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் வெகு எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். கொரோனாவால் இன்னும் தாமதம் ஆவதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.


master,vera level,ratnakumar,vijay fans ,மாஸ்டர், வேற லெவல், ரத்னகுமார், விஜய் ரசிகர்கள்

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாஸ்டர் படத்தின் இணை எழுத்தாளரான ரத்னகுமார் இப்படம் குறித்து தெரிவிக்கையில், மாஸ்டர் படம் இன்டர்வெல்லுக்கு பிறகு
வேற லெவலில் இருக்கும் என கூறியுள்ளார்.
இவரது பேட்டி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இந்த படத்தை மேலும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags :
|