Advertisement

ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் உலா வரும் தகவல்

By: Nagaraj Mon, 23 Oct 2023 4:21:58 PM

ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் உலா வரும் தகவல்

சென்னை: ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என்று இணையத்தில் தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.

பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரத்னா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய ஜோதிகா அஜித்தி வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி, அர்ஜுனுடன் ரிதம், கமல்ஹாசனுடன் தெனாலி, சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

jyothika,property value,rs.300 crores,cars,chennai,bungalow ,ஜோதிகா, சொத்து மதிப்பு, ரூ.300 கோடி, கார்கள், சென்னை, பங்களா

ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்திரமுகி திரைப்படம் அவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது அவருடன் காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இப்போதும் ஒரு படத்துக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதுமட்டும் இல்லாமல் விளம்பரங்கள் மூலமும் அவருக்கு கோடிகளில் வருமானம் கிடைக்கிறது.

சென்னையில் பெரிய பங்களா, விலை உயர்ந்த கார்கள் என ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags :
|