- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரஜினிகாந்த் குறித்து டெல்லி கணேஷ் கூறிய சுவாரசிய சம்பவம்
ரஜினிகாந்த் குறித்து டெல்லி கணேஷ் கூறிய சுவாரசிய சம்பவம்
By: Nagaraj Sun, 04 Sept 2022 4:37:30 PM
சென்னை: ரஜினிகாந்தை யார் என்றே தெரியாமல் டெல்லி கணேஷ் நண்பர்கள் பேசிய சம்பவம் நடந்துள்ளது. அப்போ நடந்தது. இப்போ தெரியவந்தது.
தமிழில் டெல்லி கணேஷ் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் என்ன சொல்லப் போகிறாய். வயோதிகம் காரணமாக ஏகப்பட்ட படங்களை ஒப்புக்கொள்ளாத டெலிவினேஷ் அவர்கள் தற்சமயம் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் டெல்லி கணேஷ் முதன் முதலில் நடிகர் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த படம் மூன்று முடிச்சு. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினிகாந்த். அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் வெளியே மக்கள் எப்படி தன்னை பார்க்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில் ரொம்பவும் ஆர்வமாக இருப்பாராம். அப்படி ஒரு முறை டெல்லி கணேஷ் நாடகம் ஒன்று சென்னையில் நடந்தபோது அதை பார்க்கச் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
அந்த நேரத்தில் டெல்லியில் இருந்த கணேசனின் தமிழ் நண்பர்கள் சென்னைக்கு
வந்துள்ளனர். அவர்களும் அந்த நாடகத்தை பார்க்க வந்திருந்தார்களாம். இதில்
நாடகம் முடிந்தவுடன், சென்னைக்கு வந்ததும் ஏதாவது படம் பார்த்தீர்களா என்று
டெல்லி கணேஷ் அவர்களிடம் கேட்க, நாங்கள் வந்தால்தான் பாலச்சந்தரின் படம்
பார்த்து விடுவோமே.
முந்தானை முடிச்சு பார்த்தோம் என்று சொல்லி படத்தில்
நடித்த ஒவ்வொருவரை குறித்தும் பாராட்டியவர்கள் ரஜினிகாந்தை பற்றியும்
பேசினார்கள்.
டெல்லி கணேசனுடன் இருப்பது ரஜினிகாந்த் என்று அடையாளம்
தெரியாமல், யாரோ ஒரு பையன் கருப்பா சிகரெட்டை தூக்கி போடறதும், ஸ்டைலா
நடக்குறதும்னு இருக்காம்பா என்று வாடா போடா என்று கூறினார்களாம். உடனே
டெல்லி கணேஷ் அப்படியெல்லாம் பேசாதீர்கள் இவர்தான் அவர் என்று
அறிமுகப்படுத்த சாரி சார் என்று மன்னிப்பு கேட்டார்களாம்.
இதில்
பாராட்டும்போது அப்படித்தானே பேசுவார்கள். ஆண்டவனையே நாம் வாடா போடா
என்றுதானே சொல்கிறோம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறினாராம்.
ரஜினிகாந்துடன் பழகிய ஒவ்வொரு நிமிடமும் அற்புதமானவை யார் மனதையும்
புண்படுத்தாத மனிதர் ரஜினிகாந்த் என்று டெல்லிகணேசன் அவரை மிகவும்
புகழ்ந்திருக்கிறார் .