Advertisement

ஹரி இயக்கும் அருவா படத்தில் நடிக்கிறாரா நடிகர் அருண் விஜய்?

By: Nagaraj Sun, 08 Nov 2020 11:19:29 PM

ஹரி இயக்கும் அருவா படத்தில் நடிக்கிறாரா நடிகர் அருண் விஜய்?

ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் அருண் விஜய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பரபரப்பான இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரி, தற்போது அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை. சூர்யாவை வைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் 'அருவா' படத்தை இயக்க முழுக்கதை, திரைக்கதை, வசனத்துடன் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அவர் அந்தப் படத்தின் கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால் அந்த பிராஜெக்ட்டை அவர் கை கழுவினார்.

இதனால் சூர்யா இந்தப் படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம். சூர்யா இருக்கும் தைரியத்தில் விஜய்யிடமும், விக்ரமிடம்கூட போகாமல் இருந்த ஹரிக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது. இத்தனை மாதங்கள் காத்திருந்தது முழுக்க வீணாகிப் போன கோபத்தில் இருந்தார் ஹரி.

kollywood,director hari,arun vijay,aruva ,கோலிவுட், இயக்குனர் ஹரி, அருண் விஜய், அருவா

இந்தக் கோபத்தைத்தான் "சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகும்." என்று சூர்யா சொன்னவுடன், உடனேயே சூர்யாவைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஹரி. இருந்தும் சூர்யா அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இடையில் தான் கையில் வைத்திருக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போன்ற ஹீரோக்களைத் தேடிய ஹரிக்கு ஏமாற்றமே கிடைத்தது.

விஜய்யின் பக்கத்திலேயே போக முடியவில்லை. விக்ரமும் இப்போ என் ஸ்டைலே மாறிருச்சு என்று சொல்லி எஸ்கேப்பாக, தனித்து நின்றார் ஹரி. இப்போது இவருக்குக் கை கொடுத்திருப்பது அவருடைய மைத்துனரான நடிகர் அருண் விஜய். இயக்குநர் ஹரி, தனது இத்தனை வருட கால திரையுலக வாழ்க்கையில் அருண் விஜய்யை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அருண் விஜய்யை ஒரு படத்தில்கூட நடிக்க வைத்ததும் இல்லை.

இப்படியிருக்க நாம் ஏன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று நினைத்த மாமனும், மச்சானும், பட்ஜெட்டை கூற, குறைய மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து இதே 'அருவா' படத்தைத் துவக்குகிறார்களாம். இதுதான் கோலிவுட்டில் பெரும் பேச்சாக உள்ளது.

Tags :