Advertisement

இலங்கை தொழிலதிபரின் மகளை திருமணம் செய்ய உள்ளாரா நடிகர் சிம்பு?

By: Nagaraj Fri, 24 Feb 2023 6:53:25 PM

இலங்கை தொழிலதிபரின் மகளை திருமணம் செய்ய உள்ளாரா நடிகர் சிம்பு?

சென்னை: சிம்பு விரைவில் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தரின் மூத்த மகன். இளைய மகன் குறளரசனுக்கும், மகள் லித்திராவுக்கும் திருமணமாகிவிட்டாலும், சிம்பு இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

தற்போது சிம்புவுக்கு பெண் கிடைத்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக உடல் எடையை அதிகரித்து வரும் சிம்பு, இதனால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

few years,hansom hero,information,playing , உடல் எடை, திருமணம், தொழிலதிபர், பன்முக திறமை

இதனால் தற்போது தீவிர உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம் பிட் ஆக்கிய சிம்புவின் திரையுலக வாழ்க்கையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது.

பல வருடங்களாக இவருக்குப் பெண் தேடிய பெற்றோர்கள், அவர் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

மேலும் சிம்புவின் திருமணம் குறித்து ஏற்கனவே பல கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் தற்போது சிம்பு விரைவில் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Tags :