Advertisement

சீதா ராமம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா நடிகர் சூர்யா

By: Nagaraj Sat, 04 Mar 2023 10:41:09 PM

சீதா ராமம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா நடிகர் சூர்யா

சென்னை: சீதா ராமம் இயக்குனருடன் நடிகர் சூர்யா கை கோர்க்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸான படங்களில் நல்ல வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது.. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கி இருந்தார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவானாலும் இந்த படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

became,dulquer salmaan,mrunal tagore,rashmika mandhana, ,எதிர்பார்ப்பு, சுதா கொங்கரா, சூர்யா, ஹனு ராகவபுடி

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி, இயக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் அவர் சூர்யாவுக்குக் கதை சொல்லி, அவரின் சம்மதத்தைப் பெற்றுள்ளதாகவும், விரைவில் இந்தப் படம் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், வாடிவாசல் என வரிசையாக படங்களை ஒத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|