Advertisement

நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணைகிறாரா?

By: Monisha Tue, 20 Oct 2020 3:45:57 PM

நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணைகிறாரா?

நகைச்சுவை நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களுக்கு சினிமாவில் தற்போது அதிக வாய்ப்பில்லை. ஆனால் அவர் ஏற்கனவே நடித்த காமெடி காட்சிகளை கொண்டு உருவாக்கிய மீம்கள் தற்போது சமூக வலைதளத்தில் அதிக அளவில் உலாவருகின்றன

இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

comedy,actor,vadivelu,bjp,politics ,நகைச்சுவை,நடிகர்,வடிவேலு,பா.ஜனதா,அரசியல்

தமிழக பா.ஜனதா சட்டசபை தேர்தலுக்கு முன் தனது பிரசார பீரங்கிகளை தயார்படுத்தி வருகிறது. அதற்காக தற்போது நடிகர் வடிவேலுவையும் பா.ஜனதாவில் இணைக்கப்போவதாக செய்திகள் உலாவருகின்றன் ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

ஏற்கனவே பா.ஜனதாவில் நட்சத்திர பட்டாளங்கள் குவிந்துள்ளனர். கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கவுதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags :
|
|
|