Advertisement

தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா நடிகர் விஜய்?

By: Nagaraj Wed, 23 Aug 2023 8:31:33 PM

தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா நடிகர் விஜய்?

சென்னை: தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. கதாநாயகியாக த்ரிஷா வருகிறார். சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்தப் படத்தை அடுத்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, முதன்முறையாக விஜய் படத்தை இயக்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

double,roles,thalapathy 68,vijay, ,இரட்டை, தளபதி 68, விஜய், வேடங்கள்

விஜய் 68 படத்தை ஏஜிஎஸ் தயாரித்து வெங்கட் பிரபு இயக்குகிறார். லியோ படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது ஒரு கிராமிய அரசியல் அதிரடி திரில்லராக இருக்கும். இப்படத்தில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகனும், மற்றொரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|