Advertisement

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?

By: Monisha Mon, 07 Dec 2020 2:53:59 PM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது 'எம்ஜிஆர் மகன்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

sun pictures,actor,vijay sethupathi,ponram,talks ,சன் பிக்சர்ஸ்,நடிகர்,விஜய்சேதுபதி,பொன்ராம்,பேச்சுவார்த்தை

இது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணத்த' படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தளபதி விஜய் நடிக்க உள்ள 'தளபதி 65' திரைப்படத்தையும், சூர்யா-பாண்டிராஜ் இணையும் திரைப்படத்தையும், தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளது. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குமா? என்பதை பார்க்கலாம்.

Tags :
|
|