Advertisement

வரும் செப்டம்பர் மாதம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறாரா?

By: Nagaraj Fri, 21 July 2023 07:51:11 AM

வரும் செப்டம்பர் மாதம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறாரா?

சென்னை: நடிகர் விஜய் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார்.

இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச பயிலகம் திட்டத்தை தொடங்கினார்.

vijay,political party,information,protest,september,fans ,விஜய், அரசியல் கட்சி, தகவல், எதிர்ப்பு, செப்டம்பர் மாதம், ரசிகர்கள்

விஜய் அரசியலுக்கு வரலாமா என்று சென்னை, கொங்கு மண்டலம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், விஜய் அரசியலுக்கு வரலாம் என மாணவ, மாணவிகள் 72.50 சதவீதம் பேர் ஆதரவளித்தனர்.,விஜய்க்கு வாக்களிப்போம் என்று 71.56 சதவீதம் பேரும், கருத்து தெரிவித்தனர். விஜய்யால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என 76.53 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த கருத்துக் கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சமீபத்தில், லியோ பட முதல் சிங்கிலில் நா ரெடிதான் வரவா என்ற பாடலும்கூட அரசியல் வருகைக்கான சமிக்ஞை என்று நெட்டிசன்கள் கூறினர்.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவர் பெயரில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய கட்சி தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|