Advertisement

நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணமா?

By: vaithegi Thu, 08 June 2023 12:18:00 PM

நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணமா?

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பெரும் இடம் பிடித்தவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் இந்த 2 திரைப்படங்களின் மூலமே தமிழில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம்.

தமிழையும் தாண்டி மேகா ஆகாஷ் தெலுங்கும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சில திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார். மேலும், தற்பொழுது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும், சில படங்களில் நடித்தும் வருகிறார். இதன் இடையில், நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.

megha akashi,marriage ,மேகா ஆகாஷி,திருமணம்

27 வயதான மேகா ஆகாஷ் இதுவரை யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் தற்போது பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மை தகவலா..? அல்லது வதந்தி தகவலா..? என்பது குறித்து மேகா ஆகாஷே விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகை மேகா ஆகாஷ் மனு சரித்ரா எனும் தெலுங்கு திரைப்படத்திலும், மழை பிடிக்காத மனிதன் எனும் தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags :