Advertisement

அஜித் படம் ரிலீஸ் தள்ளிப் ோகிறதா? ரசிகர்கள் வருத்தம்

By: Nagaraj Fri, 17 June 2022 2:36:28 PM

அஜித் படம் ரிலீஸ் தள்ளிப் ோகிறதா? ரசிகர்கள் வருத்தம்

சென்னை: ஏகே 61 படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று உலா வரும் தகவல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். தற்போது வினோத்தின் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இயக்கி AK61 படத்தில் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் வினோத்தின் கூட்டணி இணைந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று வினோத்தும் நடிகர் அஜித்தும் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த படத்திற்காக அஜீத் தன் உடல் எடையை குறைத்து செம ஸ்டைலாக மாறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.

release date,news,postponement,crew,ajith ,ரிலீஸ் தேதி, செய்திகள், ஒத்தி வைப்பு, படக்குழு, அஜித்

அதனை தொடர்ந்து AK61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளியான தகவலை அஜித் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடித்துவிட்டு இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போது அடுத்த பொங்கலுக்குதான் AK61 படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சில கடினமான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதால் சற்று நேரம் எடுத்த காட்சிகளை எடுக்கலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே தான் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் பரவி வருகின்றன.

Tags :
|
|