Advertisement

வில்லனாக அர்ஜூன் நடிக்கிறாரா? பதில் சொல்வாரா லோகேஷ் கனகராஜ்

By: Nagaraj Mon, 15 Aug 2022 10:08:11 AM

வில்லனாக அர்ஜூன் நடிக்கிறாரா? பதில் சொல்வாரா லோகேஷ் கனகராஜ்

சென்னை: அர்ஜூனும் இருக்கிறாராம் வில்லனாக?... தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

crew,arjun,villain,six people,languages,tamil ,படக்குழுவினர், அர்ஜூன், வில்லன், ஆறு பேர், மொழிகள், தமிழ்

இதற்கிடையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் சமீபத்தில் இந்த படத்தில் 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் படம் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்கள் நடிக்க இருப்பதாக படக்குழுத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தி நடிகர் சஞ்சய் சத், மலையாள நடிகர் பிரித்திவிராஜ் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க பட குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|