Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா; ப்ரோமோ வீடி யோவால் எழுந்த சந்தேகம்

முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா; ப்ரோமோ வீடி யோவால் எழுந்த சந்தேகம்

By: Nagaraj Mon, 19 Sept 2022 3:59:29 PM

முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா; ப்ரோமோ வீடி யோவால் எழுந்த சந்தேகம்

சென்னை: பாரதி கண்ணம்மா முடிய போகிறதா?... விஜய் டிவியில் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். அதில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள், சீரியலை எப்போது தான் முடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் அளவுக்கு தான் கதை சென்றுகொண்டிருக்கிறது.
பாரதியின் மருத்துவமனையில் தீவிரவாதிகள் புகுந்துவிட்ட நிலையில் அதில் கண்ணம்மா மற்றும் பாரதி ஆகியோர் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் தற்போது காட்டப்பட்டு வருகிறது.

fans,question,bharti kannamma,timebomb,promo video,conclusion ,
ரசிகர்கள், கேள்வி, பாரதி கண்ணம்மா, டைம்பாம், ப்ரோமோ வீடியோ, முடிவு

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹாஸ்பிடலுக்கு புகுந்து அதிரடி படையினர் எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள். அந்த நேரத்தில் பாரதி மட்டும் வரவில்லை என்பதால் அவரை தேடி செல்கிறார் கண்ணம்மா.

அவரை ஒரு அறையில் கட்டி தொங்கவிட்டு இருக்கின்றனர். கண்ணம்மாவை வர வேண்டாம் என அவர் தடுக்கிறார். அதற்கு காரணம் அவர் உடலில் டைம்பாம் இருந்தது தான். ஆனால் கண்ணம்மா அவர் விட்டு செல்லாமல் அவரை கட்டிபிடித்து கொள்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Tags :
|