- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறாரா இயக்குனர் நெல்சன்?
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறாரா இயக்குனர் நெல்சன்?
By: Nagaraj Thu, 05 Nov 2020 7:59:13 PM
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாஸ்டர்’ ரிலீசுக்குப் பின் விஜய்யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருந்தது. அந்தப் படத்தை துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி விஜய்க்கு ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்தார்.
கொரோனா லாக்டவுனில் ‘தளபதி 65’ படத்துக்கான கதையை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யிடம் கூறினார். விஜய்க்கு கதை பிடித்துப் போகவே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸிடம் முழுக் கதையைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முழு திருப்தியடையவில்லை.
இதனால் சில மாற்றங்கள் செய்யச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு
மறுப்பு தெரிவித்த ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலிருந்து விலகி இருப்பதாக
தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார்
என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் கோலாமாவு
கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க
இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’
படத்தை இயக்கி வரும் நெல்சன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், விஜய்க்கும்
கதை சொல்லியிருப்பதாகவும், இருதரப்புக்கும் அந்தக் கதை
பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தக் கூட்டணி இணைய
வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.