Advertisement

லோகேஷ் கனகராஜ் படத்தில் கௌதம் மேனன் மெயின் வில்லனா?

By: Nagaraj Wed, 28 Dec 2022 11:35:09 PM

லோகேஷ் கனகராஜ் படத்தில் கௌதம் மேனன் மெயின் வில்லனா?

சென்னை: உறுதி செய்தார் இயக்குனர்... லோகேஷ் கனகராஜ் படத்தில் நான் நடிக்கிறேன் என பிரபல இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவர் வில்லனாக நடிக்கலாம் என்ற தகவலும் உலா வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படமான ’தளபதி 67 படத்தில் சஞ்சய்தத், கௌதம் மேனன், நிவின் பாலி, அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் படக்குழுவினர் இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிக்கின்றனர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

gauthammenon,vijay film,lokesh,main villain,confirmed ,கௌதம்மேனன், விஜய் படம், லோகேஷ், மெயின் வில்லன், உறுதி செய்தார்

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கௌதம் மேனன் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் தான் நடிப்பதாகவும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.


இதனை அடுத்து தளபதி 67 படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்தான் மெயின் வில்லன் என்று ஒரு தகவல் உலா வருகிறது. அப்போ அர்ஜுனுக்கு மங்காத்தா போல் செம ட்விஸ்ட் இருக்கலாம் என்கிறார்கள் கோலிவுட்வாசிகள்.

Tags :
|